Publish Date: Wed, 05 May 2021 (12:14 IST)
Updated Date: Wed, 05 May 2021 (12:17 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெருவாரியான தொகுதிகள் வென்றுள்ள நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதன்முறையாக அரசியலில் முக்கியமான பதவியை பிடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் முக்கியமான அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.