Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா" எனும் கூட்டமைப்பு -அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin

Sinoj

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:34 IST)
தி.மு.கழகம் - இடதுசாரி - சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா" எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

''இந்திய ஒன்றிய மாணவர்களின் உரிமைகளை காக்க, தி.மு.கழகம் - இடதுசாரி - சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா" எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பு சார்பில், தேசியக் கல்விக் கொள்கை & நீட் தேர்வுக்கு எதிராகவும், பாசிச பாஜகவை மக்களவைத் தேர்தலில் வீழ்த்தவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட "சென்னைப் பேரணி"யை, கழகம் தொடங்கப்பட்ட ராயபுரத்தில் இந்திய மூவர்ணக் கொடியை அசைத்து இன்று தொடங்கி வைத்தோம்.
தேசிய கல்விக் கொள்கை - நீட் - இட ஒதுக்கீடு பறிப்பு- இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம். INDIA கூட்டணியை வெல்லச் செய்வோம் என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினோம் என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்துவதா? குழந்தைகளுடன் பெற்றோர்கள் புகார்..!!