Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவனகிரியில் ஒரு வார்டுக்கு நாளை மறுவாக்குப்பதிவு! – தமிழக தேர்தல் ஆணையம்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (08:44 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வார்டுக்கு நாளை மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் புவனகிரி பேரூராட்சியில் 4 வார்டுக்கான வாக்குகள் பதிவான வாக்கு எந்திரத்தில் நேற்று வாக்கு எண்ணும்போது எண்கள் காட்டும் திரை பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப வல்லுனர்கள் முயற்சித்தும் பழுதை சரிசெய்ய முடியவில்லை.

இதனால் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டுக்கான மறு வாக்குப்பதிவு நாளை அந்த பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் என்றும் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments