Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேக்கரியை அடித்து உடைத்த திமுக பிரமுகர்; கட்சியிலிருந்து நீக்கிய திமுக!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (10:35 IST)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரியை அடித்து நொறுக்கிய வழக்கில் திமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்கியுள்ளது திமுக.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கடையை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அசோக் என்ற நபரையும் மற்றும் மூவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அசோக் மற்றும் கும்பல் வாடிப்பட்டி திமுக செயலாளர் பிரகாசம் என்பவரின் தூண்டுதலின் பேரில் பேக்கரியில் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிரகாசத்தை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments