Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து அதிரடி காட்டும் மாவட்டங்கள்... லிஸ்டில் இணைந்த மதுரை!!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:31 IST)
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. எனினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரேஷன் கடை, வியாபார நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட், கடை வீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் போன்ற 18 பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேரில் ஆஜராகாவிட்டால்?... அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை.

நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

2 அணைகள் முழுவதும் மூடல்! பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது இந்தியா!

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments