Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (15:58 IST)
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை டுவிட்டரில் மட்டுமே குற்றஞ்சாட்டி வந்த சின்மயி தற்போது ஊடகங்களின் பேட்டி மூலம் குற்றஞ்சாட்ட தொடங்கிவிட்டார். எனவே வைரமுத்துவும் வெளியே வந்து விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அவர் சற்றுமுன் வீடியோ ஒன்றின் மூலம் தனது நிலை குறித்து விளக்கமளித்தார்.

இந்த நிலையில் வைரமுத்துவின் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று சின்மயி தற்போது தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஒரு டுவிட்டர் பயனாளி வைரமுத்துவுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கூற அதற்கு சின்மயி அவ்வாறு நடத்தினால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்' என்று பதிலளித்துள்ளார்.

இருப்பினும் சின்மயி முறைப்படி புகார் கொடுத்த பின்னரே இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்