Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரம் கைக்கு வந்தால் திமுகவினர் சர்வாதிகாரிகளாக மாறிவிடுவார்கள்: வானதி சீனிவாசன்..!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (11:44 IST)
அதிகாரம் கைக்கு வந்தால் திமுகவினர் சர்வாதிகாரிகளாக மாறிவிடுவார்கள் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் எப்போதுமே ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பற்றி வகுப்பெடுப்பார்கள்.
 
ஆனால், எல்லாம் மற்றவர்களுக்குத்தான். அதிகாரம் கைக்கு வந்தால் திமுகவினர் சர்வாதிகாரிகளாக மாறிவிடுவார்கள். அதுதான் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதன் சர்வாதிகார செயல்பாடுகளை ஜனநாயக முறையில் விமர்சித்ததற்காக எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்தவொரு அடக்கு முறைக்கும் பாஜக தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள்.
 
இரு வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சிலரது டிவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியபோது, ‘கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெறிப்பது அல்ல’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையே அவருக்கு மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன், என தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உண்மைதான்: பெனாசிர் புட்டோ மகன்

போர் விமானங்களை சாலையில் இறக்கி பயிற்சி பெறும் இந்திய ராணுவம்.. நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நபர் வீடு கட்டி வாடகைக்கு விட்டாரா? திருப்பூரில் அதிர்ச்சி..!

எனது உயிருக்கு ஆபத்து: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் திடுக் புகார்..!

ஆதார், பான் கார்டு, ரேசன் கார்டு இந்திய குடியுரிமை சான்றிதழ் அல்ல.. மத்திய அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments