வானதி சீனிவாசன் வேல் யாத்திரை சட்டத்திற்கு எதிராக இருப்பதாக உருவகப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி அவர் வேல் யாத்திரைக்கு நடத்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து பாஜகவினர் அதிருப்தியாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தனர். இதனிடையே இது குறித்து வானதி சீனிவாசன் பிற கட்சிகளை விடுத்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது. வேல் யாத்திரை சட்டத்திற்கு எதிராக இருப்பதாக உருவகப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.