Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி, ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த மாநாடு திடீர் ஒத்திவைப்பு

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (07:19 IST)
விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் என்ற மாநாடு டிசம்பர் 10ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பயங்கரவாதத்தை எதிர்த்து நடத்த திட்டமிட்டிருந்த இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், ராகுல்காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக ராகுல்காந்தியும் மு.க.ஸ்டாலினும் உறுதி அளித்திருந்தனர். இந்த கூட்டத்தின் மூலம் திமுக கூட்டணி உள்ள கட்சிகள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாநாடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்த அதே டிசம்பர் 10ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் ஜக்கிய முற்போக்கு கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் காரணமாகவும், டெல்டா பகுதி புயலால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாலும், தேசம் காப்போம் மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாநாட்டை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விசிக இல்லை என சமீபத்தில் துரைமுருகன் தெரிவித்ததன் பின்னணியும் இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாமென அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments