Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (15:10 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் கேட்டதாகவும் அதில் ஒரு தொகுதி பொது தொகுதி என்றும் மூன்று தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இன்று திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே நடந்த ஒப்பந்தத்தில் இரண்டு தனி தொகுதிகளான விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் மற்றும் பெற்றுக் கொண்டு திருமாவளவன் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்த போது ’அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் கூட்டணி கட்டுகோப்பாக இயங்கி ஒட்டுமொத்த வெற்றியும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு தனித் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடன்பாடு தெரிவித்திருக்கிறது

திமுக எங்களுக்கு தொகுதியை கொடுத்தது என்பதை விட நாங்கள் அனைவரும் சேர்ந்து தொகுதியை பகிர்ந்து கொண்டோம் என்பதுதான் எதார்த்தமான உண்மை. மன நிறைவோடு இந்த ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments