Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் இருந்து தினகரன் கூட்டணிக்கு மாறும் சிறுத்தைகள்?

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (17:22 IST)
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதிமுகவும் இல்லை என ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியபடியே தற்போது அந்த கூட்டணியில் விசிகவுக்கு இடமில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேர்தலுக்குப் பிறகு  பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று நான் உத்தரவாதம் தரமுடியாது என்று கூறியிருந்தார். இதனால் தேர்தலுக்கு பின் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக வாக்காளர்கள் கருதுவதால் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கூறப்பட்டது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் கிடைக்காது என முடிவு எடுத்துவிட்ட விசிக, தற்போது தினகரனுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தொகுதிப்பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு நடந்தால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அமமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், மதிமுக ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments