Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு செல்லும் குடிநீர் நிறுத்தம்? அதிகரிக்குமா குடிநீர் தட்டுப்பாடு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:28 IST)
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அந்த ஏரியின் கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்ததாலும், காவிரியில் நீர் வந்ததாலும் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெயில் அதிகமாகி உள்ளதால் ஏரியின் கொள்ளளவு பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது.

இதனால் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டதாலும், ஏரியில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படுவதாலும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

500 ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான்.. ஒன்று தான் வெடித்தது.. மத்ததெல்லாம் நடுவானில் புஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments