Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளச்சேரியில் துவங்கியது மறுவாக்கு பதிவு!

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (08:04 IST)
வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

 
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில் வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதனால் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17 ஆம் தேதி (இன்று) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்களர்களுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 
 
ஆண் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments