Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலம்மாள் பாட்டிக்கு சொந்த வீடு: அதிகாரிகள் ஒப்படைப்பு!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (11:22 IST)
வேலம்மாள் பாட்டிக்கு சொந்த வீடு: அதிகாரிகள் ஒப்படைப்பு!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலம்மாள் என்ற பாட்டி தனக்கு சொந்த வீடு இல்லை என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தற்போது அவருக்கு சொந்த வீட்டை அதிகாரிகள் அளித்துள்ளனர். 
 
தமிழக அரசு பொங்கல் பரிசு கொடுத்த போது அதை பெற்றுக்கொண்ட வேலம்மாள் பாட்டி பொக்கைவாய் சிரிப்புடன் இருந்த புகைப்படம் தமிழகம் முழுவதும் வைரலானது என்பது தெரிந்தது 
 
இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரரை தமிழக முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது சிரிப்பின் மூலம் இணையத்தில் வைரலான கன்னியாகுமரியைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி தனக்கு சொந்த வீடு இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் வீடு வழங்க வேண்டுமென்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றின் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார் 
 
இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு சொந்த வீட்டுக்கான ஆணையை அதிகாரிகள் வேலம்மாள் பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments