Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை – வேல்முருகன் விளாசல் !

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (16:04 IST)
மக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வியுள்ளது. அதிமுக – பாமக – தேமுதிக  என வலுவான கூட்டணி அமைத்தும் அவர்களால் ஒருத் தொகுதிக்கு மேல் வெற்றி பெறமுடியவில்லை. இதில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு அதிர்ச்சி அதிகம். தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி கிட்டதட்ட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். அதனால் பாமகவின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பாமகவின் தோல்வி குறித்து  முன்னாள் பாமக உறுப்பினரும் தற்போதைய தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகனிடம் கேள்வி எழுப்பியபோது ‘ பாமகவுக்கு இனி அரசியலில் எதிர்காலம் இல்லை’ எனக் கூறியுள்ளார். வேல்முருகன் பாமகவுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கிக்கு வந்த பணத்திலேயே கள்ள நோட்டுகள்! வங்கிகளில் விசாரணை!

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள்.., வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு தம்பதி..!

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது! மீண்டும் சிங்கள கடற்படை அட்டூழியம்..!

நவம்பர் 12 முதல் கனமழை சூடு பிடிக்கும்.. சென்னை மக்கள் ஜாக்கிரதை: தமிழ்நாடு வெதர்மேன்..!

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments