அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (08:40 IST)
விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் தற்போது விஜய் தனது பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அதிகமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது விஜய் அரசியல் பயணம். அவர் அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாமல் இருந்த நிலையில் சரியான நேரத்தில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளோடு சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments