நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தன்னலமற்ற மக்கள் சேவைக்காக ஆரம்பிக்கப்படவில்லை; மாறாக தனிப்பட்ட லாபம் ஈட்டுவதே நோக்கம் என காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு சான்றாக, சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா மற்றும் அனுபவம் குறைந்த புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை முக்கிய பதவிகளில் வைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய்யின் திட்டங்கள் நிலையானவை அல்ல என்றும், விவசாயம் அல்லது பொருளாதார மேம்பாடு போன்ற ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு பதிலாக, வீடு, வாகனம் வழங்குவது போன்ற நிறைவேற்ற முடியாத திட்டங்களை விளம்பரப்படுத்துவதாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், அவர் தனது காமராஜர் மக்கள் கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தான் தேர்தலில் போட்டியிட, வாசன் தனது ஒட்டுமொத்த செலவையும் ஏற்க வேண்டும் என்றும், தான் போட்டியிடும் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யக் கூடாது என்ற நிபந்தனையையும் வாசன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தேர்தலில் நிற்பது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.