Publish Date: Mon, 31 Aug 2026 (16:59 IST)
Updated Date: Mon, 31 Aug 2026 (17:06 IST)
அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவில் கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரும் ஆக்டிவாக இருந்தபோது அவர்களுக்கு எதிராக தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் செய்தவர் நடிகர் விஜயகாந்த். இரு கட்சிகளுக்கும் மாற்றாக விஜயகாந்த் வந்ததால் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்தது..
ஒருகட்டத்தில் திமுக விட அதிக வாக்குகள் வாங்கி அவர் எதிர்கட்சி தலைவராகவும் சட்டசபைக்கு சென்றார். ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு சண்டையிட்டு அது தொடர்பான வீடியோ வெளியாகி அவரின் இமேஜ் குறைந்தது . ஒருபக்கம் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால் அவரால் அரசியலில் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை.
அவரின் மறைவுக்கு பின் அவரின் மனைவி பிரேமலதா தேமுதிகவை நடத்தி வருகிறார். அதோடு தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் மாறியுள்ளார். சமீபத்தில் தேமுதிக கூட்டத்தில் பேசிய பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விஜயை செந்தூர பாண்டியனாக வளர்த்து விட்டது நமது கேப்டன்தான்.. வைரத்தை இழந்தோம்.. தங்கத்தை இழக்க மாட்டோம்னு விஜயகாந்த் பேரை சொல்லித்தான் நீங்கள் ஜெயிச்சு இருக்கீங்க..
இன்னைக்கு ஒரு மூன்றாவது கட்சி ஆட்சியை பிடிச்சிருக்குண்ணா அதற்கு அடித்தளம் போட்டது நம்ம கேப்டன்தான். காடு என்றால் யானை நடந்து நடந்துதான் பாதை உருவாகும்.. அந்த யானைதான் கஜா வராண்டான்னு நடந்து வந்த நம்ம கேப்டன்.. அன்னைக்கு கஜா நடந்ததுனாலதான் இன்னைக்கு சாதா கூஜாவெல்லாம் சி.எம்மா உட்காந்துட்டு இருக்கார் என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க