Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: காட்டமாய் விஜயகாந்த் அறிக்கை!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:03 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறித்து தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் இன்று 90.44 ரூபாய் என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விற்பனையாகி வருகிறது.  சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் சென்னையில் இன்றைய டீசலின் விலை 83.52 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறித்து தனது சமீபத்திய அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருந்தும் பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் உயர்த்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். 
 
தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதாரத்தில் சிக்கித்தவித்து வந்த சாமானிய மக்கள் தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களின் நலனை கருத்தில்கொண்டு பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கலால் வரியை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விற்பனை வரியை குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments