Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரித்துப்பிய த்தூ விவகாரம்: விஜயகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்டார்!

காரித்துப்பிய த்தூ விவகாரம்: விஜயகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்டார்!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (11:29 IST)
கடந்த 2015-ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கேள்வி ஒன்றுக்கு பத்திரிகையாளர்களை பார்த்து த்தூ என காரித்துப்பி நீங்க எல்லாம் பத்திரிகையாளரா என ஆவேசமாக கேட்டார்.


 
 
2015 ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த விஜயகாந்திடம் செய்தியாளர் ஒருவர் 2016-இல் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த் இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா? என கேட்டு த்தூ என காரித்துப்பினார்.
 
மேலும் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசினார். இந்த இரண்டு சம்பவங்களுக்காக விஜயகாந்த் மீது இந்திய பிரஸ் கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் வழக்கறிஞர், இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
 
அந்த கடிதத்தின் மூலம் விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்ட முறைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். விஜயகாந்தின் மன்னிப்பு கடிதத்தை ஏற்பதாக அறிவித்த பிரஸ் கவுன்சில் விஜயகாந்த் மீதான வழக்கையும் வாபஸ் பெறுவதாக கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments