Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! NDA சார்பில் எந்த கட்சி போட்டி..! அண்ணாமலை அறிவிப்பு..!

Senthil Velan
வெள்ளி, 14 ஜூன் 2024 (13:34 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 
இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. இவர் திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார்.

ALSO READ: ரூ.78 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு.! தமிழக அரசு அறிவிப்பு..!!
 
அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிடுவார் என அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments