Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவர் பலி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (10:15 IST)
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அனுமதி பெறாத பட்டாசு ஆலைகளில் தான் அதிகமான அளவு விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 5 தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்பு பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களுக்கு முன் 21,000 பேர் வேலை காலி.. இப்போது மீண்டும் ஒரு வேலைநீக்கமா? ஆரக்கிள் அதிரடி முடிவு?

இம்ரான்கான் இறந்துவிட்டாரா? பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளரின் திடுக் தகவல்..

நீங்க வந்தபிறகு சூரியனுக்கு வியர்த்துபோச்சி!.. சட்டசபையில் ஓ.பி.எஸ் - அமைச்சர் வினோத் மோதல்!..

வணக்கம் வைத்த விஜய்!. கண்டும் காணாமல் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின்!...

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஒரு பிரதமர் வர வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

அடுத்த கட்டுரையில்
Show comments