Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அமைச்சருக்கு விஷால் கடிதம்: ஆத்திரத்தில் தமிழக அரசு?

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (04:54 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சமீபத்தில் பெங்களூரில் நடந்த விழாவில் காவிரியில் இருந்து தண்ணீர் கேட்பது தமிழர்களின் உரிமை என்று ஆவேசமாக பேசினார்.



 
 
இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உத்தரவிட்டார். இதற்கு விஷால் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தமிழக அரசு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது.
 
கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் கர்நாடக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை திறந்துவிடும்படி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விஷால் ஒரு சினிமா விழாவில் பேசியதால் தான் தண்ணீர் திறந்துவிட்டதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது தமிழக அரசை அதிருப்தி அடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
விஷால் அரசியலுக்கு வருவதற்கு அச்சாரமாக ஒரு அரசியல்வாதி போன்றே செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments