சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு தி.மு.க. அஞ்சுவதாக கூறுவது தவறு. எங்களுக்கு பயம் எஸ்.ஐ.ஆர். மீதல்ல; எங்கள் வாக்குகள் களவு போய்விடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரதான கவலை என திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் நமது வீட்டில் உள்ள உடைமைகளை பாதுகாக்க நாம் பூட்டி வைப்பதுபோல, இதுவும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான். தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிப்பதில் 2019ஆம் ஆண்டு முதலே தெளிவான முடிவோடு இருக்கிறார்கள். அந்த வாக்குகளை யாரும் திருட முயற்சிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த பாதுகாப்பை நாங்கள் மேற்கொள்கிறோம் என்றும் கூறினார் .
உண்மையில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்குகள் இருந்தால், அவற்றை நீக்குவதை தி.மு.க. ஒருபோதும் எதிர்க்காது. மாறாக, அதிகாரம் படைத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேரடியாக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்து போலி வாக்குகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கட்டும். அவ்வாறு அவர் செய்தால், அவரை பாராட்டவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் பேட்டியில் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.