Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சீட்டுக்கு பதிலாக பூத் ஸ்லிப்: வடிவேல் பட பாணியில் நடந்த காமெடி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:12 IST)
வடிவேலு நடித்த படம் ஒன்றில் உங்களுக்கு தான் வாக்கு போட்டேன் என்பதை நிரூபிக்க வாக்குச் சீட்டை கையிலேயே கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறும் காமெடி காட்சி ஒன்று வரும் என்பது அனைவரும் அறிந்ததே
 
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டியில் போடுவதற்கு பதிலாக பூத் ஸ்லீப் ஐ வாக்குப்பெட்டியில் போட்டுவிட்டு வாக்குச் சீட்டை கையுடன் எடுத்துச் சென்ற வாக்காளர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு 1 என்ற பகுதியில் வாக்களித்த இரண்டு பேர் வேட்பாளரிடம் உங்களுக்கு தான் வாக்களித்தேன் என்பதை நிரூபிப்பதற்காக வாக்குச்சீட்டு கையில் எடுத்துக்கொண்டு பூத் சிலிப் வாக்களித்துள்ளனர்
 
இதனை வாக்கு எண்ணும் அதிகாரி செய்தியாளர்களுக்கும் காண்பித்த நிலையில் இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலு காமெடி காட்சிகள் நிஜத்தில் நடந்து வருவதைப் பார்க்கும்போது தேர்தலில் வாக்களிப்பவர்கள் இன்னும் காமெடி செய்து வருகிறார்கள் என்பது தெரியவருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் இரண்டாவது முறை தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் மக்கள்!

அன்றே கணித்த அப்துல் கலாம்! அடித்து துவம்சம் செய்த ஆகாஷ் ஏவுகணைகள்! - மாஸ் காட்டிய இந்திய கண்டுபிடிப்பு!

இன்று இரவு 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு..!

ராணுவ வீரர்களின் சொத்துக்களுக்கு வரி இல்லை: துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு..!

பாகிஸ்தான் அணு ஆயுத மையத்தை இந்தியா தாக்கியதா? புன்சிரிப்புடன் ஏர்மார்ஷல் சொன்ன பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments