Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போனது தண்னீர் லாரிகள் ஸ்ட்ரைக் – பொதுமக்கள் நிம்மதி !

Webdunia
சனி, 25 மே 2019 (09:26 IST)
பல பிரச்சனைகளால் அறிவிக்கப்பட்டு இருந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மழை பொய்த்ததால் குடிதண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடிவரும் நிலையில் பொதுமக்களுக்கு ஓரளவு தண்ணீர் கிடைக்கின்றது என்றால் அது தண்ணீர் லாரியில் இருந்து மட்டுமே. ஆனால் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் வாழும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் எடுக்க தடைவிதித்து, அதிகாரிகள் மோட்டார்களை சேதப்படுத்துவதாக லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் தண்ணீர் எடுப்பதற்காக அரசிடம் முறையான அனுமதி கேட்டும் அரசு இதுவரை முறையான அளிக்காததால் வரும் 27ம் தேதி காலவரையற்ற போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த கூட்டத்தின் பொதுமக்களின் நன்மையைக் கருதி வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை வாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments