Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை: எய்ம்ஸ் மருத்துவர்கள்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:33 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ஆகியோர் சிகிச்சை செய்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் நீதியரசர் ஆறுமுகச்சாமி அவர்கள் தலைமையிலான விசாரணை கமிஷன் முன் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராகினர்.
 
இந்த விசாரணை முடிந்தபின்னர் எய்ம்ஸ் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை, சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம் என்றோம் என்றும், ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் என்றும் கூறினர்.
 
எனவே ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினத்தில் அவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டதற்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் இந்த கருத்துக்கும் பெரும் முரண்பாடு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments