Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தேர்தல் அறிக்கையில் 100% நிறைவேற்றியுள்ளோம். 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்! -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Periyasamy Minister

J.Durai

, வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:25 IST)
சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:


 
ஊரக வளர்ச்சித் துறையினர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது குறித்த கேள்விக்கு:

போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக சட்டமன்ற தேர்தலில் அறிவித்த தேர்தல் அறிக்கை நிறைவேற்றாமல் மக்களிடம் தேர்தல் வாக்குறுதி கொடுத்த கருத்து கேட்பது வேடிக்கையானது என ஓபிஎஸ் பேசியது தொடர்பான கேள்விக்கு:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு துறையிலும் கிட்டத்தட்ட 100% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், 5 பவன் நகை தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை, விவசாய கடன் தள்ளுபடி கடன் வழங்குவது இது தவிர ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் முதல்வர் தமிழ்நாட்டுக்கு வழங்க போகிறார் அது குறித்து நல்ல செய்தி வரும் அதை இப்போது கூற முடியாது.

இந்தியா கூட்டணியில் இருந்து பல தலைவர்கள் வெளியேறியது குறித்த கேள்விக்கு:

எல்லோரும் ஒருமித்த கருத்து உடையவர்கள் தான் இந்தியா கூட்டணி உருவாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் முக்கிய காரணமாக இருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கும்போது அதை காப்பதற்காக உருவாகிய தலைவர்  கருணாநிதி  வழியில் வந்த தளபதி ஸ்டாலின்  நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் முதல் குரல் கொடுக்கக் கூடியவர். 

திமுகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு:

மக்களை சார்ந்து தான் தேர்தல் அறிக்கை, மக்களுக்காக தான் அரசு தமிழக முதல்வரே மக்களின் முதல்வர் தான். மக்களின் முதல்வராக ஸ்டாலின் உள்ளபோது தேர்தல் அறிக்கையும் மக்களைச் சார்ந்து தான் வரும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட்டு கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப் போவதாக தகவல் வெளிவருது குறித்த கேள்விக்கு:

கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதும் திமுகவினர் போட்டியிடக்கூடிய இடங்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறிபோனது தேசியவாத காங்கிரஸ்.. புதிய கட்சியை தொடங்கினார் சரத்பவார்..!