Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Senthil Velan
செவ்வாய், 12 மார்ச் 2024 (13:54 IST)
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது  என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்நிலையில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது  என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிஏஏ சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும் இனம் மதம் ஆகியவற்றால் வேறுபட்டாலும் ஒன்றுபட்டு வாழும் இந்திய மக்களின் நலனுக்கு எதிரான சட்டம் என்றும் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
 
சிஏஏ சட்டம் இந்திய தாய் திருநாட்டின் பன்முகத்தன்மை மதச்சார்பற்ற தன்மைக்கு முற்றிலும் எதிரானது என்றும் சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம் வாழ் தமிழர்கள் நலனுக்கும் எதிரானது சிஏஏ சட்டம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: பாஜகவில் கட்சியை இணைத்தார் சரத்குமார்..! தமிழக அரசியலில் பரபரப்பு..!!
 
சிஏஏ போன்ற எந்த சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பது தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments