Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Siva
வியாழன், 28 நவம்பர் 2024 (07:38 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய ஃபெங்கல் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மாமல்லபுரம் அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இருப்பினும், தற்போது புயல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதால், நவம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு புயல் கரையை கடக்கும் என்றும், அப்போது சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில், அதாவது விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments