Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (07:38 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதன் காரணமாக, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது என்பதை நேற்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏற்கனவே இன்று காலை 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments