Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ரஜினிக்கு இருக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லையா? பாஜக அழைப்பு விடாதது ஏன்?

ரஜினிக்கு இருக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லையா? பாஜக அழைப்பு விடாதது ஏன்?
, வியாழன், 30 மே 2019 (12:31 IST)
மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்காதது ஏன் என சில யூகங்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். 
 
தமிழ்நாட்டை பொருத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
webdunia
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்காக சில காரணங்கள் யூகங்கள் அடிப்படையில் கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வரும் அல்ல, திமுக நாடாளுமன்ற குழுவிலும் அவர் இல்லை எனவே அவரை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. 
 
ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும், பத்ம விருது பெற்றவர்கள் குடியரசுத் தலைவரின் விருந்தினர்களாக அழைக்கப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
ஆனால், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காண்ட்ராக்டர் நேசமணி உருவான கதை