Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தலைமை குறித்து MGR உயிலில் குறிப்பிட்டது என்ன?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (14:37 IST)
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர் என கு.ப.கிருஷ்ணன் பேட்டி. 

 
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனிடையே முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளதாவது, ஈபிஎஸ், ஓபிஎஸ் மட்டுமேதான் அதிமுகவா? எம்.ஜி.ஆரின் உயில் படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர்.
 
இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்கு தெரியாமல் எனக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பினார்: சீமான் குறித்து விஜயலட்சுமி

வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

உதயநிதி ஸ்டாலினுடன் நேரடி விவாதத்துக்கு நான் தயார்- ஆர்.பி.உதயகுமார் சவால்

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

முதல்வர் மீது அவதூறு கருத்து: இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments