Publish Date: Thu, 01 Oct 2026 (12:53 IST)
Updated Date: Thu, 01 Oct 2026 (12:55 IST)
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அக்டோபர் 2ம் தேதியான நாளை மகளிருக்கான விரிவு படுத்தப்பட்ட கட்டணமில்லா பயணத்திட்டமான வெற்றி பயண திட்டத்தை முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் விஜய் ‘தமிழகத்தில் உள்ள நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் கட்டணமில்லா வெற்றி பயணத்தை பயன்படுத்தி கொள்ளலாம்’ என்று அதில் அவர் பேசியிருக்கிறார்..
மாநகரம் மற்றும் நகர்புறங்களில் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கல் இலவசமாக பயணிக்கலாம் என அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும், 12,692 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் தினமும் 84.34 லட்சம் பெண்கள் இதில் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க