Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (19:47 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் சென்னையில் அதன் பாதிப்பு உச்சத்தை சென்றுள்ளது. இன்று 47 பேருக்கு சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து நிலையில், ‘சென்னையில்தான் தற்போது அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்படுவதாகவும் தினமும் ஆயிரம் என்ற விகிதத்தில் சென்னையில் மட்டும் கொரோனா சோதனைகள் செய்யப்படுவதால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்  அதிக பாசிட்டிவ் வர காரணம் இருப்பதாகவும் தெரிவித்தார்
 
மேலும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்த்து மொத்தம் 1.5 கோடி பேர் வசிப்பதாகவும், தமிழகத்தில் வேறு எங்கும் இவ்வளவு பேர் வசிக்கவில்லை என்றும், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் அதிக அளவில் கேஸ்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனாலும் சென்னையில் போக போக கேஸ்களை கட்டுப்படுத்துவோம், என்று விஜயபாஸ்கர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
 
இருப்பினும் டெல்லி, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களை விட சென்னையில் மிக குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

ஆபாச படங்களை பார்த்து மருமகளிடம் தவறாக நடந்து கொண்ட மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்..!

கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்க பெயரை வைக்கலாமா? - எடப்பாடியாரை தாக்கிய மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments