Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொங்கு மண்டலத்தையும் தவிர்த்த திமுக: காரணம் என்ன?

Advertiesment
திமுக
, ஞாயிறு, 17 மார்ச் 2019 (07:45 IST)
தென்மண்டலத்தில் உள்ள தூத்துகுடி , தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்ட திமுக, கொங்கு மண்டலத்திலும் பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கே தள்ளிவிட்டது. தென்மண்டலத்தில் மு.க.அழகிரியால் திமுகவுக்கு பாதிப்பு வரும் என்ற பயத்தை போலவே எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த பகுதியான தென்மண்டலத்திலும் திமுக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது
 
தென்மடலத்தில் உள்ள திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கோவை தொகுதி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈரோடு மதிமுகவுக்கும், கரூர் காங்கிரஸ் கட்சிக்கும், நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் மட்டுமே திமுக அதிக கவனம் செலுத்தியுள்ளது என்பது தொகுதி பட்டியலில் இருந்து தெரிய வருகிறது
 
திமுக
அதேபோல் சென்னை மற்றும் வடமாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி  வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, ஆகிய 13 தொகுதிகளை மொத்தமாக அள்ள வேண்டும் என்பதே திமுகவின் திட்டம் என கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல்: