Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை: டி.ஆர்.பாலு விளக்கம்

திமுக
Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (08:41 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக திமுக மிகத் தீவிரமாக போராட்டம் நடத்தியது. சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
 
அதுமட்டுமின்றி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய போதும், டெல்லியில் மாணவர்கள் போராடிய போதும் திமுக தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைமையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக திடீரென கலந்துகொள்ளவில்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி விட்டு திடீரென இந்த கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது பெரும் வியப்பை அளித்தது. இந்த சட்டத்தின் தங்கள் நிலையிலிருந்து திமுக பின்வாங்குகிறது என்ற எண்ணம் கூட ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு அளித்த விளக்கத்தில் ’கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? என்றும், கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும்’ என்று கூறினார். எனவே தங்கள் கூட்டணி பிரச்சனையை பொதுமக்கள் பிரச்சனையில் திமுக சம்பந்தப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments