Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:07 IST)
அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? என விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி. 

 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வில் விலக்கு பெற கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
 
இந்நிலையில் நீட் விலக்கிற்கு ஆதரவாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுபள்ளி மாணவர்களுக்கு கேட்காமலே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது. யாருமே கேட்காத சூழலில் மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என்ற நிலைபாட்டில் அதிமுக அனைத்து காலகட்டத்திலும் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? என விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு வந்தது எப்போது என்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

ஒரு கேஸ் குடுக்க வந்திருக்கேன்..! போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த சிறுத்தை! - வைரலாகும் நீலகிரி சிசிடிவி வீடியோ!

திருமாவளவனுக்கு நாட்டு பற்றே கிடையாது.. இந்த தேச விரோதிகளால் நாட்டுக்கு ஆபத்து! - எச்.ராஜா ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments