Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பியை வைத்துக் கணவனைக் கொலை செய்த மனைவி – பின்னணி என்ன ?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (11:33 IST)
நெய்வேலி என்.எல்.சி. பிளாக் நம்பர் 2-ல்  வேலை செய்யும் பழனிவேலை அவரது மனைவியே தனது தம்பியை வைத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் சின்னசேலம் பகுதியில் நெடுஞ்சாலையில் நின்ற காருக்குள் இருந்து புகை வருவதைக் கண்ட ரோந்து போலிஸார். பார்த்தபோது ஒரு நபர் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரைப் பற்றிய விவரங்களை விசாரித்த போலிஸார், அவர் நெய்வேலி என்.எல்.சியில் வேலை செய்யும் பழனிவேல் என்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நெய்வேலிப் போலிஸார் மூலம் பழனிவேல் வீட்டுக்கு சென்று அவரது மனைவி அஞ்சலைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடையாத அவர் வித்தியாசமாக நடந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்து ரத்தவாடை வரவே சந்தேகப்பட்டு வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் ரத்தம் பரவியிருந்ததைக் கண்டு அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்க தனது கணவனைக் கொலைசெய்ததை அந்த மனைவி ஒத்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ‘என் கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தினார். இதனைத் தாங்கமுடியாத நான் என் தம்பியிடம் சொல்லி அவரை வீட்டிலேயே வைத்துக் கொலை செய்தோம். அதன் பின் சாக்குப்பையில் மூட்டைக் கட்டி காரில் கொன்று சென்றார்கள். வாகனத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயன்றபோது மாட்டிக்கொண்டோம்’ எனக் கூறியுள்ளார். இதனையடுத்துப் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் பழனிவேலின் மனைவியான் அஞ்சலைக்குதான் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதைக் கண்டுபிடித்துவிட்டதால்தான் பழனிவேலை அவர் கொன்றுவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments