Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாயக் கல்யாணம்.. சாப்பாட்டில் கொசுமருந்தைக் கலந்த மனைவி – அதிரவைக்கும் சம்பவம் !

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (10:36 IST)
திருப்பூர் அருகே கணவனின் சாப்பாட்டில் கொசு மருந்து கலந்து கொடுத்துவிட்டு தனது காதலனோடு சேர்ந்து காதலனோடு தலைமறைவாகியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனுசாமி. இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தியா எனும் பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது. இது சந்தியாவின் விருப்பம் இல்லாமல் நடந்த கட்டாயத் திருமணம் எனக் கூறப்படுகிறது. அவருக்கு வேறு ஒரு நபருடன் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கல்யாணமாகி சில மாதங்கள் ஆனாலும் சந்தியா மனம் மாறாததால் அவருக்கும் முனுசாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் மனைவி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட முனுசாமி மயங்கி விழுந்துள்ளார். எழுந்துபார்த்த போது அவரது மனைவியையும் டூவீலரையும் காணவில்லை.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்ந்த முனுசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சாப்பாட்டில் கொசு மருந்து கலந்திருப்பதாக அதிர்ச்சியான செய்தியை கூறியுள்ளனர். அதையடுத்து தனது மனைவியின் மேலும் அவரது காதலர் மீதும் போலிஸில் புகாரளித்தார் முனுசாமி. மேலும் அவரது மனைவி 3 மாதம் கர்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதுசம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments