Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனின் ரகசியத்தை உடைப்பாரா தங்க தமிழ்ச்செல்வன் ? அதிர்ச்சியில் தினகரன் கட்சி !

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (17:49 IST)
டிடிவி தினகரன் மற்றும் அமமுக கட்சியை தரக்குறைவாக விமர்சித்த காரணத்தினால், தங்க தமிழ்செல்வனை கட்சியில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக டிடிவி தினகரன் கூறினார்.
இந்நிலையில் அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்பட்டதும் அதிமுகவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட் நிலையில், தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக தெரிகிறது. 
 
அதாவது, தேனியில் என்னை எதிர்க்கும் விதத்தில் என் மகனை எதிர்த்தாககவும், நான் பாஜகவில் இணைய போவதாகவும், பதவி ஆசையில் பாஜகவிடம் அடிபணிந்ததாகவும் என்னை பற்றி அவதூறு பேசிய தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் இணைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்ததாக தெரிகிறது. அதனால் அமமுகவில் இருந்து நீக்கப்பட உள்ள தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 
 
இந்நிலையில் தற்போது டிடிவி தினகரனை விமர்சித்த காரணத்தினால், அமமுகவில் இருந்து நீக்கப்படவுள்ள தங்க தமிழ்செல்வனுக்கு  அதிமுக கட்சியிலும் அவருக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. திமுகவிலும் பலத்தை எதிர்ப்புகள் வலுக்கிறது. 
 
இப்படியிருக்க ஏற்கனவே அமமுக கட்சியில் இருந்து விலகி திவாகரன் துவங்கிய அண்ணா திராவிடர் கட்சியில் ஐக்கியமாகியுள்ள தேனி கர்ணன் : தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக - திமுக கட்சிகளில் சேராமல்  ஒரு புதுக்கட்சியில்தான் இணைவார் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒருவேளை தங்க தமிழ்ச்செல்வன் ஒரு புதிய கட்சியில் இணைந்தால் , இத்துணை நாட்கள் தினகரனுடன் அவர் நட்பு பாராட்டியதால் அவரைப் பற்றிய பல உண்மைகளையும், அவரது அரசியல் ரகசியம் மற்றும் வியூகத்தையும் தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படுத்த நேரிடலாம் என்று அமமுவினர் சற்று அதிர்ந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments