Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பண்ணையில் தலை துண்டாகி பெண் பலி! திருவள்ளூர் அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva
புதன், 21 ஆகஸ்ட் 2024 (11:18 IST)
திருவள்ளூர் அருகே இயந்திரத்தில் முடி சிக்கியதால் ஆவின் பால் பண்ணையில் பணி செய்து வந்த பெண் தலை துண்டாகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வரும் நிலையில் அந்த பால் பண்ணையில் 90 ஆயிரம் லிட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பில் பால் பாக்கெட்டுகளை அடுக்கும் பணியில் இருந்த உமாராணி என்ற 30 வயது பெண்ணின் தலைமுடி எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கியதாகவும் இதனால் உமாராணியின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை உயிரிழந்த உமாராணி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவது வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த துயர சம்பவத்தை அடுத்து ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி மற்றும் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகனமழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

டிரம்ப் முடிவில் திடீர் திருப்பம்.. வரி உயர்வை 8 நாட்களுக்கு ஒத்திவைத்த டிரம்ப்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. மீண்டும் ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments