Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறாக பேசிய உயரதிகாரி: தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (20:15 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே காவல் துறையில் உள்ளவர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், உயரதிகாரிகளின் டார்ச்சர், குடும்ப சூழ்நிலை உள்பட பல்வேறு காரணங்களால் இந்த தற்கொலை நிகழ்ந்து வருவதால் அவர்களுக்கு படிப்படியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இன்று சென்னை அயனாவரத்தை சேர்ந்த அம்பிகா என்ற ஆயுதப்படை பெண் காவலர் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் அம்பிகா, காவல்துறை  வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் பணியில் உள்ளார். இவர் வழக்கம் போல் இன்று காலை சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து தன்னுடைய பணியை பார்த்து கொண்டிருந்தபோது அம்பிகாவை, உயர் அதிகாரி ஒருவர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. 
 
இதனால் மனமுடைந்த அம்பிகா எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து. மயங்கி விழுந்த அம்பிகாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடன்பணிபுரிந்த காவலர்கள் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments