Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீஸாரை பணியமர்த்த வேண்டாம்: டிஜிபி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (11:47 IST)
சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீஸாரை பணியமர்த்த வேண்டாம்: டிஜிபி உத்தரவு!
இனிமேல் சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார்களை பணியில் அமர்த்த வேண்டாம் என  என டிஜிபி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பெண் போலீசார் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
 
சாலை பாதுகாப்பு பணிகளில் பெண்கள் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி சற்றுமுன் அறிவித்துள்ளார். சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல் துறைக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து டிஜிபி திரிபாதி அவர்கள் சற்று முன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
 
பெண் போலீசார் சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதை அடுத்து தற்போது பெண் போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவை அடுத்து முதல்வருக்கும் டிஜிபிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments