ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து மன விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது என்றும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் இயற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவன் சந்தோஷ் என்ற 23 வயது இளைஞர் ஆன்லைனில் ரம்மி விளையாடி ஏராளமான பணத்தை இழந்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனவிரக்தியில் இருந்த அவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.