Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான பெண்ணுடன் காதல் – சித்தியின் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (11:10 IST)
சென்னையில் திருமணமான பெண்ணுடன் பழகக்கூடாது என சொன்னதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னையின் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் எனும் இளைஞர். இவருக்குத் தாய் தந்தை இல்லாததால் தனது சித்தியுடன் வசித்து வருகிறார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணிடம் காதலாக பழகி வந்துள்ளார். பரிமளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இதனால் மனோஜின் சித்தி அவருடன் பழகக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் வைத்து வாழ்ந்துள்ளார். இதுதொடர்பாக சித்திக்கும் மனோஜுக்கும் இடையே தினசரி சண்டை நடந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மனோஜ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது சம்மந்தமாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments