Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 4 நாட்களில் கைதான யூடியூபில் வீடியோ பதிவு செய்த நபர்!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (18:50 IST)
யூடியூபில் வீடியோ பதிவு செய்த ஒரு நபர் திருமணமான நான்கு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவர் ஜோதிடத்தை தொழிலாக செய்து வருபவர். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அந்த வீடியோவில் உடும்பை பிடித்து அதன் பாகங்களை தனித்தனியாக அரைத்து காய வைத்து எரித்து அதன் சாம்பலில் இருந்து மை தயாரிப்பதாகவும் இதை வசியம் செய்ய பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் 
 
தடை செய்யப்பட்ட விலங்கான உடும்பில் அவர் வசிய மை தயார் செய்ததை வனத்துறையினர் அறிந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தான் திருமணமாகியிருந்தது என்பதும் அவர் விருந்துக்காக மாமியார் வீட்டிற்கு சென்று உள்ளதையும் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து மாமியார் வீட்டுக்குச் சென்ற வனத்துறையினர் ஜோசியம் பார்க்க வேண்டும் என அவரை அழைத்து வந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments