கிருபானந்த வாரியாரின் ஆன்மிக சிந்தனைகள்...

Webdunia
மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டு கிடக்கிறான். இதிலிருந்து விடுபட  முயற்சிக்க வேண்டும்.

 
* மூவாசைகளும் நம்மை மீண்டும் மீண்டும் பிறவிச்சுழலில் தள்ளிவிடுகின்றன. கரையேற நாம் தான் முயற்சியில்  இறங்கவேண்டும்.
 
* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம். அதுபோல தெய்வீக வாழ்வில் ஈடுபட நினைப்பவன்  ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
 
* எவன் புகழை விரும்பாமல் தன் பணியைச் செய்து வருகிறானோ அவனுடைய புகழை மூவுலகிற்கும் கடவுள்  தெரியப்படுத்துவார்.
 
* வயது தளர்ந்த காலத்தில் மனிதன் படும் துன்பத்தை எண்ணி இளைஞர்கள் தன்னைத் தானே திருத்திக் கொள்ள முயல  வேண்டும்.
 
* தியானம், பக்தி, தர்மத்தில் ஈடுபாடு, ஒழுக்கம் இவையெல்லாம் நம் மனதில் இருக்குமானால் இருக்கும் இடமே  புனிதமாகிவிடும்.
 
* பணம் ஒருவரிடம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.
 
- வாரியார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

அடுத்த கட்டுரையில்
Show comments