சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் அமைந்துள்ள இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம். ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.