கிரகநிலை:
ராசியில் சூரியன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞசம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
ஐப்பசி 06 (23.10.2024) அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 08 (25.10.2024) அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 18 (05.11.2024) அன்று பஞசம ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
ஐப்பசி 22 (08.11.2024) அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 27 (13.11.2024) அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
பலன்:
இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக் கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் புதிய பதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக் கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
சித்திரை:
இந்த மாதம் அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
ஸ்வாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
விசாகம்:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: தினமும் துர்காதேவியை வணங்கி வாருங்கள். துர்காஷ்டகம் படியுங்கள்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள் : அக் 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 27, 28